ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வது தொடர்பிலான இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இரவு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட முன்னாள் ஜனாதிபதி, அன்றையதினம் (ஆண்டுவிழா நாளில்) தனக்கு சர்வதே மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எனவே, தான் வௌிநாடு செல்ல நேரிட்டுள்ளதாகவும், இந்த அழைப்பு கட்சியின் ஆண்டு விழாவுக்கு நாள் குறிக்கும் முன்னரே விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.