கடந்த காலங்களைப் போன்றே எதிர்வம் 2016ம் ஆண்டிலும் மாகாணசபைகளுக்கு நேரடியாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்தில் மாகாணசபைகளுக்கு, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
எனினும் இந்த யோசனைத் திட்டத்தை மாகாண முதலமைச்சர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர்.
ஜனாதிபதி, நிதி அமைச்சர், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர், அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மாகாண முதலமைச்சர்கள் ஆகியோருக்கு இடையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது வழமை போன்று மாகாணசபைகளுக்கு நேரடியாக பணம் வழங்க இணங்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டுக்கு பழைய முறையிலும் அதன் பின்னர் 2017ம் ஆண்டில் புதிய முறையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.