Breaking
Sun. Nov 24th, 2024
பாடசாலையின் கோரிக்கை தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதினின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  பாடசாலையின் சில தேவைப்பாடுகளை  தமது மாகாண நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுத்தருவதாகவும் கூறினார்.
வவுனியா  சூடுவேந்தபுளவு  அல்-இக்பால் பாடசாலை யில் இடம் பெற்ற  விளையாட்டுப் போட்டி  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் அங்கு பேசுகையில்  கூறியதாவது –
வவுனியா மாவட்டத்தின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை மேம்பாடுகள் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கவனம் செலுத்திவருகின்றார்.நாம் இழந்த எத்தனையோ விடயங்களை பெற வேண்டியுள்ளது.சில வேளைகளில் இவைகள் எமக்க கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த போதும்,அதனை சிலர் தடுத்து நிறுத்துகின்றனர்.
இந்த பாடசாலையில் பல்வேறு தேவகள் இருப்பதாக அதிபர் சுட்டிக்காட்டினார்.எனது மாகாண நிதி ஒதுக்கீட்டில் இருந்து சிலவற்றை பெற்றுத்தர உறுதியளிக்கின்றேன்.அதே போல் இந்த ஏனைய தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளேன்.
இந்த பிரதேசத்து மக்கள் இந்த அபிவிருத்திகளை பெறுவதற்கு காணரமானவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை மறந்துவிட முடியாது.இன்று வேறு நபர்கள் வருவார்கள் அவர்கள் பதவிகளை அடைந்த பின்னர் தனிப்பட்ட தேவைப்பாடுகளுக்கே முன்னுரிமை அளிப்பார்கள் ஏனெனில் அவர்கள் சமூகத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள் அல்ல வியாபாரிகளே என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வீ..ஜயதிலக மற்றும் அமைச்சரின்  இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத் உட்பட பலரும் கலந்து  கொண்டனர்.

Related Post