Breaking
Mon. Dec 23rd, 2024

பஸ் நடத்துனரால் தாக்கப்பட்ட மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த பஸ் நடத்துரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளை கினிகம பகுதி பாடசாலையொன்றில் ஆண்டு 11 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் ஒருவனே தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பில் பண்டாரவளை பிராந்திய இ.போ.ச.டிப்போ பஸ் நடத்துனர் ஒருவரே பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பஸ்சில் பாடசாலைக்குச் செல்வதற்காக ஏறிய இம்மாணவன் பஸ்சில் செல்வதற்கான (பாஸ்) பருவச்சீட்டை  பஸ் நடத்துனரிடம் காண்பித்து பதிவு செய்ய தாமதித்தமையினால் ஆத்திரம் கொடை பஸ் நடத்துனர் மாவணனை கடுமையாகத் தாக்கியுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பண்டராவளைப் பொலிஸார் மேற்படி சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

By

Related Post