புத்தளம் நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமினால், பாடசாலை மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக தேவை உடையோர் 3000 பேரை இனங்கண்டு, புத்தளம் மாவட்டத்தின் புளிச்சாக்குளம் மற்றும் கனமூலை பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
புளிச்சாக்குளம், உமர் பாரூக் பாடசாலை அதிபரின் வேண்டுகோளின் பெயரில், பிரதேச சபை உறுப்பினர் நிஜாமுதீனின் சிபாரிசில் 200 மாணவர்களுக்கும், கனமுலை பிரதேசத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கும் நகர சபை உறுப்பினர் அலி சப்ரியினால், கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, ஏற்கனவே புளிச்சாக்குளம் / உமர் பாரூக் பாடசாலையின் 400 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.