Breaking
Fri. Dec 27th, 2024

A.S.M.இர்ஷாத்

கிரான்ட்பாஸ் அவ்வல் ஸாவிய்யா அல் மத்தரசத்துல் யூசுபிய்யாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மத்ரசாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்களை வழங்கினார்.

ஆ பவுண்டேசனின் ஏற்பாட்டில் இவ் இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சருக்காக விசேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பவுண்டேசனின் தலைவர் அபு ஹாஜியார், பசீர் தங்கல், றியாஸ் சாலி, அஹம்மட் முனவ்வர் உப்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டபின் கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

rishad3 rishad.jpg2_ rishad.jpg2_.jpg3_ rishad.jpg2_.jpg3_.jpg4_ rishad.jpg2_.jpg3_.jpg5_ (1)

Related Post