Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிவாரணங்களை சேகரிக்கும் பணியை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில் 011 27 86 384, 071 23 65 965, மற்றும் 071 83 87 212 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உங்கள் நிவாரணப்பொருட்களை வழங்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மாணவர்களுக்கான நிவாரணப்பொருட்களை நேரடியாக வழங்க விரும்புபவர்கள் பெலவத்த, இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாகவுள்ள நிவாரண சேகரிப்பு பகுதிகளில் கையளிக்க முடியும் என கல்வி அமைச்சு மேலும், அறிவித்துள்ளது.

மேலும், இந்நிவாரண நடவடிக்கைகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும். அத்துடன் விரும்புவர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நிவாரணங்களை வழங்க முடியும்.

நாட்டில் வாழும் சிறுவர்களின் நல்வாழ்விற்காக உங்களால் முடிந்தளவு உதவிகளை வழங்குமாறு கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

By

Related Post