புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் கா.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.எம் தாஹிர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.