தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
கடந்த 5ம் திகதி மாணவர்களினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை நடத்தி செய்யப்பட்ட பரிந்துரைகள் தெடர்பில் இன்றைய தினம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு தீர்மானம் எடுக்க உள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டார்களா எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பது எவ்வாறு என்பது குறித்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பொலிஸ் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியிருந்தது.
தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் மற்றும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உயர்அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விரிவான அடிப்படையில் விசாரணைகளை நடாத்தி கடந்த வாரம் பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் பரிந்துரைகளை மூவர் அடங்கிய குழு சமர்ப்பித்துள்ளது.
இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டியாரச்சி தலைமயில் இன்று கூட உள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளனர்.