Breaking
Fri. Nov 15th, 2024

புனித பூமி என்ற போர்­வையில் மாதம்­பையில் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்­லிம்­களின் காணி உறு­தி­களை பரி­சீ­ல­னைக்­காக மாதம்பை பிர­தேச செய­லா­ள­ரிடம் கைய­ளிக்­கு­மாறு பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க சம்­பந்­தப்­பட்ட குடும்­பங்­களைக் கோரி­யி­ருக்­கிறார்.

அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் உத்­த­ர­வுக்கு அமைய இன்று செவ்­வாய்க்­கி­ழமை சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள 24 முஸ்லிம் குடும்­பங்­களின் பூர்­வீக காணி உறு­திகள் மாதம்பை பிர­தேச செய­லா­ள­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளன என பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் அமைப்பின் தலைவர் எஸ்.எம். கௌஸுல் அமீர் தெரி­வித்தார்.

மாதம்­பையில் முஸ்­லிம்கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்து வரும் காணி புனித பிர­தே­சத்­துக்­குட்­பட்­டது என அர­சாங்க வர்த்­த­மானி மூலம் பிர­சு­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­பி­ர­தே­சத்தில் குடி­யி­ருக்கும் முஸ்­லிம்கள் இது தொடர்பில் கடந்த வாரம் பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவை அவ­ரது அமைச்சில் சந்­தித்து முறை­யிட்­டனர்.

காணியின் வர­லாற்றை கேட்­ட­றிந்த அமைச்சர் இக்­காணி ஏன் சுவீ­க­ரிக்­கப்­பட்­டது என்­பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பரி­சீ­லனை செய்து பார்க்க வேண்டும் எனத் தெரி­வித்­த­துடன் மாதம்பை பிர­தேச செய­லா­ளரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் பூரண அறிக்­கை­யொன்­றினைத் தனக்குச் சமர்ப்­பிக்கும் படியும் வேண்­டினார்.

இத­னை­ய­டுத்து பிர­தேச செய­லாளர் பாதிக்­கப்­பட்­டுள்ள 24 முஸ்லிம் குடும்­பங்­களின் காணி உறு­தி­களை பரி­சீ­லனை செய்து அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வுக்கு அறிக்­கை­யொன்­றினைச் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

முஸ்­லிம்­களின் காணி உறு­திகள் எந்த அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ளன. எத்­தனை வரு­டங்கள் முஸ்­லிம்கள் வாழ்­கி­றார்கள் என்னும் விப­ரங்கள் திரட்­டப்­பட்டு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

பிர­தேச செய­லா­ள­ரினால் சமர்ப்­பிக்­கப்­படும் அறிக்­கையின் பிர­தி­யொன்­றினை பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்கும் வழங்­கு­மாறு அமைச்சர் பிர­தேச செய­லா­ள­ருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டோர்கள் அமைப்பினரால் இன்று காணி உறுதிகள் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பு அறிக்கையை தாமதமின்றி தயாரிப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். (விடிவெள்ளி)

By

Related Post