Breaking
Sun. Mar 16th, 2025
காலம் சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் கடைசி விருப்பம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நான் மரணித்த பின்னர் பெறுமதிமிக்க சவப்பெட்டி, வீதி ஊர்வலம், கொடிகள், பெறுமதிமிக்க சுடலை போன்றன இருக்கக் கூடாது.

உயிரிழந்து 24 மணித்தியாலத்திற்குள் என்னை தகனம் செய்ய வேண்டும் என காலம் சென்ற சோபித தேரர் சிங்கள ஊடகமொன்றுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நேர்காணல் வழங்கியிருந்தார்.

2010ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் திகதி பிரசுரமான வார இறுதிப் பத்திரிகையில் இந்த நேர்காணல் வெளியாகியுள்ளது.

எனது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது என அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

காலம் சென்ற சோபித தேரரின் கடைசி விருப்பம் குறித்த வீடியோ ஒன்று நேற்று சமூக ஊடக வலைத்தளங்களில் பிரசூரமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post