Breaking
Fri. Nov 15th, 2024

நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மாத்தறை தெய்யந்தர வெல்பாமுல பிரதேசத்தில் இந்த அதிசய மீன் காணப்படுகின்றது.

வெல்பாமுல பிரதேசத்தைச் சேர்ந்த எச்.என். ஜோசப் என்பவரின் வீட்டுக்கு எதிரில் உள்ள சிறிய நீர்நிலையில் வாழும் மீன் ஒன்று ஒரு மணித்தியாலம் வரையில் நீர் இன்றி வாழும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டு உரிமையாளர் ஜோசப், “திப்பிலி திப்பிலி” என அழைக்கும் போது அவரது கைகளுக்கு வரும் இந்த மீன் சுமார் ஒரு மணித்தியாலம் நீர் இன்றி தரையில் இருக்கின்றது.

இந்த மீனை வீட்டுக்கு எடுத்து வந்து தலையணை ஒன்றில் வைத்து உறங்க வைக்கின்றார்.

எவ்வித பதற்றமும் இன்றி இந்த மீன் வீட்டில் அமைதியாக இருப்பதனை காண முடிகின்றது.

நாளுக்கு நாள் இந்த அதிசய மீனை பார்வையிட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஜோசப்பின் வீட்டுக்கு படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீருக்கு கீழ் வாழும் மீன், ஜோசப்பின் குரல் கேட்டவுடன் அவரை நோக்கி வருவதனை பார்க்க முடிகின்றது.

இந்த மீன் தனியாக நீர்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் மற்றுமொரு மீனை கொண்டு வந்து போட உத்தேசித்துள்ளதாகவும் ஜோசப் தெரிவித்துள்ளார்.

By

Related Post