Breaking
Thu. Nov 21st, 2024

மாத்தறை – கதிர்காமம் புகையிரத நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் பயணிகளுக்கான சிறந்த போக்குவரத்தை வழங்கும் நோக்கிலேயே இந்த புகையிரத பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வேலைத்திட்டம் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில் இந்த புகையிர போக்குவரத்து அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த புகையிர போக்குவரத்து மாத்தறையில் இருந்து கதிர்காமம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரையிலும் விஸ்தரிக்கப்படவுள்ளது.

இந்த புகையிரத பாதை 26.7 கிலோ மீற்றர் வரையில் நீழும் எனவும், 12 பாலங்கள், இரண்டு சுரங்கங்கள், 4 பிரதான புகையிர நிலையங்கள் மற்றும் 2 துணை புகையிரத நிலையங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post