Breaking
Mon. Dec 23rd, 2024

மாத்தளைப் பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோர் தொகை நாளாந்தம் அதிகரித்து வருவதாகத் தெரியவருகின்றது. மேற்படி டெங்கு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான மாத்தளை பொது வைத்தியசாலை வார்ட் நிரம்பி வழிவதைக் காணக்கூடியதாகவுள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு முறையான படுக்கை வசதியின்றி பாய் விரித்து தரையிலே படுக்க வைத்திருப்பதையும் காணக்கூடியதாகவிருக்கிறது.

மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து நாளாந்தம் மேற்படி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டொரு மாதங்களாகவே விட்டுவிட்டு பெய்யும் மழையின் காரணமாக டெங்கு நுளம்புகள் பெருக்கம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கும் மாநகர சபை சுகாதாரப் பிரிவினர் டெங்கு நுளம்பு ஒழிக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மரணங்கள் எதுவும் நிகழவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

By

Related Post