Breaking
Mon. Dec 23rd, 2024

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் எந்த வித நிபந்தனைகளும் இன்றி உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று (27-07-2015)நல்லிரவு 12.30 மணிக்கு றஹ்மானின் இல்லத்திற்கு வருகை தந்த போதே றஹ்மான் இணைந்து கொண்டார்.அமைச்சர் றிஷாட் பதியுதீன்; இஸட்.ஏ.எச்.றஹ்மானுக்கு மாலை அணிவித்து வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இவருடன் முன்னூற்றுக்கும் மேற்பட்ட அவரது முக்கிய ஆதரவாளர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,தேசியப் பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வேட்பாளர்களான மருதமுனையைச் சேர்ந்த சித்தீக் நதீர்,சம்மாந்துறையைச் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில்,அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.என்.எம்.நபீல்,மற்றும் ஒய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.கமால்தீன்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் உள்ளீட்ட கட்சி முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாளர்கள் அதிக அளவில் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

rahman rahman.jpg2_.jpg3_ rahman.jpg2_

Related Post