மலேசிய விமானமான எம்எச் 370 மாயமாகி ஓராண்டுக்கும் மேலான நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மிகவும் குட்டித் தீவான குடஹுவதூ தீவு வாசிகள், அன்றைய தினம் மிகவும் தாழ்வாக பறந்த மிகப்பெரிய விமானம் ஒன்றை பார்த்ததாகக் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி காணாமல் போன விமானம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், குடஹுவதூ தீவு வாசிகள், அன்றைய தினம், மிகவும் தாழ்வாக பறந்த விமானத்தைப் பார்த்ததாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் கூறியுள்ளனர். விமானத்தைப் பார்த்தது பற்றி அன்றைய தினம் தீவுவாசிகள் பேசிக் கொண்டனர். ஆனால், விமானம் மாயமான தகவல்கள் அன்றைய தினம் அவர்களுக்குத் தெரியவில்லை. பிறகுதான் விமானம் மாயமான தகவல் அவர்களுக்குத் தெரிய வந்தது.
ஒரு வேளை தாங்கள் பார்த்த விமானம்தான் அந்த மாயமான விமானமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். விமானம் பறந்து சென்ற சில நிமிடங்களில் பலத்த சத்தத்தையும் அவர்கள் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.