Breaking
Tue. Dec 24th, 2024

காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கிடப்பதாக விமான போக்குவரத்து துறை வல்லுநர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகருக்குப் புறப்பட்டுச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்370) திடீரென ரேடார் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பில் இருந்து விடுபட்டு மாயமாக மறைந்தது. புறப்பட்ட சிறிது நேரத்தில் காணாமல் போனதால் அது இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் கடற்பகுதியில் தீவிரமாக தேடினர். பல நாடுகளின் துணையுடன் நடந்த தேடுதல் பணியில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில், காணாமல் போன விமானத்தின் பாகங்கள் மலேசியாவுக்கும்-இந்தியாவுக்கும் இடையே வங்காள விரிகுடா கடலில் கிடப்பதாக இந்த வழக்கை விசாரித்து வரும் ஆந்த்ரே மைல்னி என்ற விமான போக்குவரத்து துறை வல்லுநர் கூறியதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

விமான பாகங்களைக் கண்டுபிடிக்க அதிக செலவாகும் என்பதால், இதற்கு நன்கொடை கொடுக்க பொதுமக்கள் முன்வரவேண்டும். ஒவ்வொருவரும் தலா 6.70 பவுண்டுகள் கொடுக்க வேண்டும் என்று மைல்னி கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Post