Breaking
Tue. Dec 24th, 2024

– யு.எல்.எம். றியாஸ் –

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பின்தங்கிய கிராமங்களுள் மலையடிக் கிராமம் நான்காம் பிரிவும் ஒன்று இக் கிராமமானது மலைச் சாரல்களயும், மேட்டு  நிலங்களையும்,கரடு முரடான பாதைகளையும்  கொண்டதாகவே இதன் அமைவிடம் காணப்படுகிறது.
தினமும் தமது அன்றாட தொழிலாக கூலித்தொழில் செய்பவர்களே இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இக் கிராமமும், இக் கிராம மக்களும் ஒரு சோகம் நிறைந்த நாளை கடந்த சனிக்கிழமை (03.10.2015)  சந்தித்து இன்றுவரை ஆளாத்துயரில் இருந்து வருகின்றனர். சிஹாப் ஆசிப் எனும் எட்டு வயது பாலகனின்  அகால மரணமே ஆளாத்துயறிற்கு காரணமாகும்.
கடந்த சனிக்கிழமை காலை பொழுது  சிஹாப் ஆசிப்பிற்கு வாழ்வின் இறுதி நாள் இன்று எனக்  கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டான். புள்டோசர் இயந்திரத்தின் செயற்பாடு காலை சுமார் 9.30 மணியளவில்  சிஹாப் ஆசிபின்    உயிரை காவுகொண்டது.
சற்றேனும் மறு உலக வாழ்வை  நினைத்திராத சிஹாப் ஆசிப் இக்கிராம மக்களுக்கும் இவரைப் போன்ற சிறுவர்களுக்கும் ஒரு பாடமாகவே அமையும். முகம்மது முஸ்தபா ஜவ்பர், ஆதம்பாவா சித்தி ஹிதாயா தம்பதியினருக்கு முதல் முத்தாகப் பிறந்த சிஹாப் ஆசிப் மூன்றாம் தரத்தில் சம்மாந்துறை அல்  – அர்ஷத்  மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவனாவார். இவருக்கு மூன்று வயதுடைய ஒரு தம்பியும் இருக்கிறான். இயற்கையிலேயே ஒரு திறமையான மாணவனாகவும் தான்  ஒரு  மார்க்க அறிஞ்சராக வரவேண்டும் என்ற இலட்சியத்தோடும்  தனது  கல்வியை தொடர்ந்துவந்துளார்.
கூலித்தொழில்  செய்த  தகப்பன் ஜவ்பர் தனது உழைப்பு  போதாதென்று குடிம்பத்தின் நிலை கருதி தனது இரு புதல்வர்களையும், தனது மனைவியையும் பிரிந்து பல கனவுகளோடு தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார். இவர் வெளிநாடு சென்று 18 மாதங்களே ஆகின்றது இவ்வாரனா நிலையிலேயே இவ் துயரச் சம்பவம் இடம் பெர்ரிறிக்கிறது.
தனது வீட்டில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில்  மலையடிக் கிராமம் நான்கில்  உப்புருவி மலை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு பிரதேசத்தில் புல்டோசர்  இயந்திரம் ஒன்று தனியாருக்குச் சொந்தமான வளவில் உள்ள மலையை உடைத்து  நிலத்தை சமச்சீராக்கும்  பணியில் மூன்று நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருந்து இதனைப் பார்பதற்காக தனது நண்பர்கள் சகிதம் அவ்விடத்திற்கு சென்ருள்ளார். அவ்  வமயம்  அவ்விடத்தில் மேலும் பல சிறுவர்கள் கல்லுடைக்கும் புள்டோசர் இயந்திரத்தின் செயற்பாட்டினை பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 11 சிறுவர்கள் அவ்விடத்தில் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது. கல்லுடைக்கும் பிரதேசத்திற்கு அண்மித்த பிரதேசங்கள் குடியிருப்பு பிரதேசம் என்பதால் எதுவித பாதுப்புக்களோ,அல்லது அபாய சமிக்கைகளோ இடப்பட்டிரிக்கவில்லை அத்துடன் இவ் இயந்திரம் வேலைசெய்யும் போது  சாரதியை தவிர அவ்விடத்தில் சாரதிக்கு உதவியாக எவரும் இருக்கவுமில்லை.
இதேவேளை புல்டோசர்  சாரதியால் அவ்விடத்தில் நின்ற சிறுவர்களை விலகி நிற்குமாறு  கூறியதாக அவ்விடத்தில் இருந்த சிறுவன் தெரிவித்தான்.  இதன் பின்னர் சில சிறுவர்கள்  விலகிச் சென்று பார்த்துக் கொண்டிரின்தனர். கனரக இயந்திரம் வேலைசெய்யும் இடத்திற்கு சற்று அருகில் அரைகுறையாக கட்டப்பட்டிருந்த  அறைக்குள் இருந்து சிஹாப் ஆசிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கல்லுடைக்கும் வேலை முடிவுறும் நேரத்தில் குறித்த வளவின் உரிமையாளரினால் வேலி ஓரத்தில் இருந்த வேம்பு  மரத்தை பிடிங்கித் தருமாறு சாரதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க சாரதி அந்த வேம்பு மரத்தை  புல்டோசரின் உதவியுடன்  பிடுங்கும் நடவடிக்கயில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் சிஹாப் ஆசிப் அரை குறை கட்டிடத்தினுள் நின்றுகொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில்  சுவரில் வேம்பு மரம் சாய்ந்து அரை குறையாக கட்டப்பட்டிருந்த  சுவர்மீது விழுந்ததை அடுத்து அச் சுவர்  சிஹாப் ஆசிபின் தலையில்  இடிந்து விழுந்துள்ளது.
இதனால் சிகாபின் தலை கடுமையாக நொறுங்கிக் இரத்தம் பீரிட்டிப் பாய்ந்தது. இதை அறிந்த சாரதியோ செய்வதறியாது அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்துக்கொண்டிருந்த ஏனைய சிறுவர்களும் பயத்தின் காரணமாக அவ்விடத்தில் இருந்து ஓடி எவரிடமும் குறித்த சம்பவத்தை கூறவில்லை. ஆனால் சிஹாப் ஆசிபின் நண்பர் சிகாப்பை கானவில்லை என்று தேடும்போதுதான் தலையில் சுவர்விளுந்து  இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டுள்ளார்.
உடனடியாக  சிஹாப் ஆசிபின் வீட்டை  நோக்கி ஓடிவந்துள்ளர் வீட்டில் எவரும் இல்லை அச்சிறுவனும் பின்னர் எவரிடமும் சம்பவத்தை அறிவிக்கவில்லை இதற்கிடையில் அவ்விடத்தால் சென்ற ஒரு சிறுமி தலையில் சுவர்விளுந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த சிஹாப் ஆசிபை கண்டுள்ளார். உடனடியாக ஓடிவந்து சிஹாப் ஆசிபின் பெரிய தந்தையிடம் “சிஹாப்புக்கு கல்லுளுந்து தலையில ரெத்தம் ஓடுது கவுண்டி மிசினடிய” என்று கூறவே பெரிய தந்தையும் குறித்த இடத்திற்கு விரைந்தபோது சிஹாபின்  தாயார் ஹிதாயா இரத்த வெள்ளத்தில் கிடந்த தன மகனை நெஞ்சோடு கட்டியணைத்து அழுதுகொண்டு தூக்கிக்கொண்டு வந்துள்ளார்.
சிறு தூரம் நடக்கும்போதே  சிஹாபின்  தாயார் ஹிதாயா மயக்கமுற்று கீழே விழ  உறவினர்களின்  அழுகைச்சத்தம் பிரதேசமெங்கும் கேட்க சம்பவ இடத்திற்கு மக்கள் படையெடுத்தனர். ஆனால்  சிஹாபின்  உயிர் அவ்விடத்திலேயே பிரிந்துவிட்டதாக ஆசிபின் பெரிய தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேலும் ஆசிபின் பெரிய தந்தை மேலும் ஒரு விடயத்தை கூறி விம்மி அழத்தொடங்கினார் சில நாட்களுக்கு முன்பு ஆசிபின் பெரிய தந்தை சிகரட் புகைத்துக் கொண்டிரிந்துள்ளார் அவ்விடம் சென்ற ஆசிப் பெரிய தந்தையின் கையில் இருந்த சிகரெட்டை தட்டிவிட்டு  என்னோடு கோபித்துக் கொண்டிருந்தார் என்னடா மன  என்று கேட்கவும் இதுக்குபிறகு நான் பேசுவதாக இருந்தால் இந்த கெட்ட  பழக்கத்த விடனும் என்று கூறி  எனக்கு புத்திமதியும் சொல்லிதந்தார்கிளி  ஏன்ட பேரன் என கண்ணீர் மல்க கூறினார்.
இதற்கிடையில்  சிஹாபின்  தாயார் ஹிதாயா மிகுந்த துயரில் தன்மகனை இழந்த சோகத்தில் இருந்து விடுபட முடியாத நிலையில் நாட்களை கழித்து வருகின்றார். வெளிநாட்டில் இருந்து வாப்பா எப்ப வருவார் உம்மா  என்று தன தாயிடம் கேட்கும் சிறுவன்  சிஹாப் குடும்பத்தின் முதல் பிள்ளையாய் இருந்து பல இலட்சியத்தோடு வாழ நினைத்து இறுதிவரை தன தந்தையை பதினெட்டு மாதங்களாக காணாமலே இவ் உலகத்தை விட்டுப் பிரிந்துள்ளார்
ஆனால் மகனின் மரணச் செய்திகேட்டு தந்தை அவசரமாக தாய் நாடு திரும்புவதாக சிஹாபின் தாய் கனத்த குரலுடன் கண்ணீர் மல்க கூறினாள் அத்தோடு நின்றுவிடாமல் என்மகனுக்கு நேர்ந்தகதி வேறு எந்தப் பிள்ளைக்கும் எந்தத் தாய்க்கும்  நடக்கக் கூடாது என்னோட இப்படியான துயரச்சம்பவங்கள்  முடியவேண்டும் எனவும் கூறினாள்.
188

By

Related Post