Breaking
Sun. Dec 22nd, 2024

எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனினும், இது குறித்து அமைச்சரவை தீர்மானம் எடுத்து, ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமாயின் நாடாளுமன்றினூடாக அதனை மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருட இறுதிக்குள் உள்ளுராட்சி தேர்தலை நடத்தவிருந்தபோதும், பின்னர் அதற்கான கால அவகாசத்தை கருத்திற்கொண்டு பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி தேர்தலானது, அநேகமான பழைய தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post