Breaking
Thu. Nov 28th, 2024

இலங்கையில் வெளிப்படைத் தன்மையுள்ள ஜனநாயக சமூகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் சூசான் ரைஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்புக் கொள்கை தொடர்பிலான உரை குறித்த தனது உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மாற்றத்தை சந்தித்திருக்கும் இலங்கை, மியன்மார், துனீசியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா உதவும் என்றுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதிப்பேச்சாளர் மேரி ஹர்வ், நல்லிணக்கம் மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையின் புதிய அரசாங்கம் எடுத்துள்ள ஆரம்ப கட்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

நீண்ட கால விடயங்கள்- உரிமைகள், நல்லாட்சி, ஜனநாயகம், பொறுப்புக்கூறுதல் போன்ற விடயங்களுக்கு தீர்வை காண மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம். நிச்சயமாக சில சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post