Breaking
Fri. Dec 27th, 2024

அரசியலில் எதிரிகள் அல்லது தன்னுடய போட்டியாளர்கள் உள்ளிருந்தை உருவாகின்றார்கள் என்பதற்கு எமது தற்போதய ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன மிகப்பெரும் முன்னுதாரணமாகும். தன்னோடு தேர்தல் களத்தில் போட்டியிட யாருமே இல்லை அதற்கான எதிர் வேட்பாளரை தானே இறக்கவா என்று முன்னாள் ஜனாதிபதி கேட்டபோது அவரினுள் இருந்து கிளம்பிய மெல்லிய சத்தம் பெரும் கிரிடத்தை சாய்த்தது போல் அக்கரைப்பற்றில் ஒரு சுளல் சூறாவெளி உருவாகி மையவேரினை நோக்கி நகர்வதை எம்மால் அவதானிக்கமுடிகிறது.

அக்கரைப்பற்றில் ஒருதாசாப்பத்தற்கிகு மேலாக அரசியல் மகுடம் சூடிக்கொண்டு குறுநில மன்னர்போல் தன்னை காட்டிக் கொள்ளும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா கடந்த 2011ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றதேர்தலில் தனது வம்ச அரசியலை நிலைநாட்டும் முகமாக தன்னுடைய புத்திரரை தனது குதிரை சின்னத்தில் தேர்தலில் இறக்கினார்.அப்போது அக்கரைப்பற்று தவிசாளராக இருந்த தவத்தினை வெளியில் விட்டால் எதிரி பலம் பெறுவான் எனகருதி உள்ளிருந்தே  கழுத்தறுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் அத்தேர்தலில் தான் ஒரு மாற்றீடு வேட்பாளர் போல் இறங்கி மகனுக்காக பிரச்சாரம் செய்ததுடன் தவத்தினை தோற்கடிப்பதற்காக சகல வழிகளிலும் முயற்சி செய்தார் தவம் 500 வாக்குகளையும் பெறமாட்டான் என்று வாய்கிழிய காத்தினார்.இங்கு தான் எதிரியின் கோட்டையில் இருந்து எதிரிக்கு தாக்குகின்ற பொறிமுறையை கையான்டு வெற்றியைதனதாக்கினார்  தவம் திகில் அடைந்த அமைச்சர் ஜில்மாட் மூலம் புத்திரனை மேயராக்கினார்.

முஸ்லிம் தேசத்திற்காக ஒலுவில் பிரகடனத்தை முன்னின்று செய்த தவம் உள்ளிருந்து கொல்கின்ற வஞ்சகர்களோடு அரசியல் சஞ்சாரம் செய்ய முடியாது இவர்கள் மூலம் முஸ்லிம் சமுகத்திற்கு எதனையும் பெற்று கொடுக்கவும் முடியாது என்பதனை உணர்ந்து முஸ்லிம்களின் தாய் கட்சியான முஸ்லிம் காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார். அக்கரைப்பற்றில் கூட்டங்கள் போடமுடியாத நிலையில் காணப்பட்ட முஸ்லிம் காங்கிரசிற்கு மீள்பிரவேசம் கொடுத்து 2012ம் ஆண்டில் இடம் பெற்ற மாகாண சபைத் தேர்தலில்; சுமார் 7200 வாக்குகளை அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரசிற்கு பெற்றுக்கொடுத்தார் இத்தேர்தலில் அதாஉல்லா தரப்பினருக்கு கிட்டத்தட்ட 9500 வாக்குகளை கிடைத்தன அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்காங்கிரசிற்கு அரசியல் எதிரி அக்கரைப்பற்றைத்தவிர வேறு எங்கும்கிடையாது இத்தேர்தலில் ராஜபக்கஸ குடும்பத்தின் உடன்பிறவாத சகோதரன் போல் காட்சிதந்த அதாஉல்லா எனும் கோலிதை ஒரு தாவிதாகவே எதிர் கொண்டார் தவம் அதில் ஏனைய மக்களின் ஆதரவுடன் வெற்றியும் கண்டார்.

கொடுரமான அரசியல் குரோதங்களை கொண்ட அதாஉல்லாவினை கடந்த ஜனாதிபதிதேர்தலில் எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டார் தவம். அதிகார வெறியின்மமதை தலைகளை தாக்கியபோதும் முஸ்லிம்காங்கிரசின் தலைவரைக் கொண்டுவந்து அக்கரைப்பற்றில் மாபெரும் கூட்டத்தை நடாத்தி; சுமார் பதின்ஐயாயிரம் வாக்குகளுக்கு மேல் அன்னத்திற்கு விழ தன்னை அர்ப்பனம் செய்தார். அக்கரைப்பற்று மக்களின் எண்ணங்களில் அக்கரைப்பற்றுக்கான மாற்று அரசியலுக்கான தெரிவு தவம்தான் எனும் மையகருத்து உருவாகியிருக்கும் நிலையில் இதனை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு கையாளப்போகிறது என்பதுதான் எம்முன்னிருக்கின்ற கேள்வி.

இன்னும் ஒருசில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் ஒண்று வரப்போகின்றது அதாஉல்லா தன்னுடைய சிற்றரசு பற்றிய கனவுடன் சிதறிக்கிடக்கும் உதிரிகளையும் சேர்க்கமுடியும். ஜனாதிபதிதேர்தலுக்கான சிங்கள வாக்குகளை அம்பாரைமாவட்டத்தில் அவதானிக்கும்போது அவை மஹிந்தவைக்கு சாதகமான நிலையிலை காணப்படுகிறது தமிழ் வாக்குகள் தனியாக பிரிந்து செல்லுமாக இருந்தால் முஸ்லிம்காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகள் இணைந்தாலும் அவை கடும் போட்டியானதாவே காணப்படும் மேலும் முஸ்லிம்காங்கிரஸ் மூன்று உறுப்பினர்களை எடுப்பதற்கான வியூகத்தை வகுப்பதன்றால் அக்கரைப்பற்றின் முஸ்லிம் வாக்குகள் மிகவும் அவசியமானதாகக் காணப்படும் அக்கரைப்பற்றின் எழுச்சியை தக்கவைப்பதற்கும் அக்கரைப்பற்றுக்கான மாற்று அரசியலின் வடிவம் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நிருபணம் செய்ய மாகாணசபையின் அதிகாரங்களை உடனடியாக தவத்தினூடாக அக்கரைப்பற்றுக்கு நகர்த்துதல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு ஏற்புடைய விடயமாக காணப்படுகிறது. மைத்திரியை வெல்லவைப்பதற்கு பக்கபலமாக ஏனையோர் மாறியது போன்று முஸ்லிம் காங்கிரசின் மற்றும் முஸ்லிம் சமுகத்தின் எதிரயை தோற்கடிப்பதற்கு தவத்தினை இத்தருணத்தில் உயர்த்துவது காலத்தின் தேவையாக தென்படுகிறது.

Related Post