Breaking
Sun. Dec 22nd, 2024

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு நட்டஈடு பணம் வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் நட்டஈடு பணத்தைக் கொண்டு மாணவர்கள் தமது வைத்திய பட்டப்படிப்பை வெளிநாடுகளில் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என அகில இலங்கை வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் குறித்த நட்டஈட்டு பணம் வழங்கப்பட்டதன் பின்பு மாலபே வைத்திய கல்லூரியை விடுமாறும் இந்த சங்கத்தின் செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் உள்ள பல்கலைக்கழக கொள்கைகளை ஏமாற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ள மாலபே வைத்திய கல்லூரி மூடப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

By

Related Post