அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு (25) நடைபெற்றது.
கட்சியின் தலைவரும் அமைச்சருமான் றிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பலர் கலந்து கொண்டதுடன் பெருந்திரளான உலமாக்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். மௌலவி முபாரக் தலைமையில் இது நடைபெற்றது.