Breaking
Sat. Mar 15th, 2025

மாளிகாவத்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதன்போது வெளியே வந்த தரப்பினர் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் சில வாகனங்கள் சேதமடைந்தன

இதனால் மாளிகாவத்தையில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் உடனடியாக பொலிஸ், அதிரடிப்படை, இராணுவ வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

இந்நிலையிவ் மாளிகாவத்தை மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சில இணையத்தளங்கள் நேற்றிரவு செய்திகள் வெளியிட்டன

எனினும், விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கைகலப்பினால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மோதிக் கொண்டதாகவும், இதன்போது வீசப்பட்ட சில போத்தல்கள் பள்ளிவாசல் மீது வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மைதானத்திற்கு வெளியே தாக்குதலில் சேதமடைந்த வாகனங்களின் புகைப்படங்கள் சில! 

Maligawatthafull (1)

Related Post