Breaking
Mon. Dec 23rd, 2024

விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை வரவேற்று கௌரவிக்கும் வைபவம் நேற்று 18.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிச்சேனை வட்டாரக்குழுவின் ஏற்பாட்டிலும் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், அல் இக்ரா விளையாட்டுக்கழகம், டோன் டச் விளையாட்டுக்கழகம், ஸைபுல்லாஹ் தற்காப்புக் கலைக்கழகம் ஆகியவற்றின் பங்குபற்றல் மற்றும் ஒத்துழைப்புடனும் வட்டாரக்குழுத்தலைவர் ஏ.எல். சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய , நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.தையிப், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி Dr.அப்தாப் அலி, மாவடிச்சேனை வட்டாரக்குழு இணைப்பாளர் எம்.எச்.எம்.ஹக்கீம், மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஜெளபர், மாதர் கிராம அபிவிருத்திச்சங்க தலைவி திருமதி லத்தீபா, அல் இக்ரா விளையாட்டுக்கழக உப தலைவர் நாஜீம், செம்மண்னோடை வட்டாரக்குழுத்தலைவர் எம்.நஜிமுதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இர்பான், மாவடிச்சேனை கிராம சக்தி மக்கள் சங்கத்தலைவர் முஹம்மது முபீன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்விள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களினால் மாவடிச்சேனை மண்ணுக்குச்செய்த பாரிய சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post