Breaking
Sun. Jan 12th, 2025

மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள ஒரேயொரு பாடசாலை கமு/அல் – அஷ்ரப் மகா வித்தியாலயமாகும்.இங்கு தரம் ஒன்று தொடக்கம் சாதாரண தரம் வரையான வகுப்புக்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகிறது. இப்பாடசாலையில் கல்வி கற்ற பல மாணவ மாணவிகள் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், சமூகத்தில் உயர் அரச பதவிகளிலும் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமின்றி இப்பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை ரீதியிலும், மாகாண மட்ட ரீதியிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஊருக்கும், பாடசாலைக்கும் பெறுமைபெற்றுத்தந்துள்ளனர்.

இருந்த போதிலும் இவ் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட தளபாடா வசதிகள் போதாமையினாலும், தற்போது கையிருப்பிலுள்ள தளபாடங்கள் பாதிப்புக்குள்ளாகி நேர்த்தியான முறையில் இல்லாமையினால் மாணவர்கள் பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டியுள்ளதாக பாடசாலையின் முன்னால் அதிபர் சைபுடீன் அவர்கள் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவிடமும், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் அவர்களிடமும் இக் குறைபாட்டைக் கூறி இதற்கான உதவி ஒத்தாசைகளை வழங்குமாறும் வேண்டினார்.

அவ் வேண்டுகோளுக்கமைய எமது மத்தியகுழு, பிரதேச சபை உறுப்பினரின் முயற்சியின் பயனாக எமது கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் 5 இலட்சம் ரூபா நிதியொதிக்கீட்டின் மூலம் பாடசாலைக்கான தளபாடங்கள் இன்று அதிபர், ஆசிரியர், மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அ.இ.ம.காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம். ஜலீல், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.

எனவே இவ்வாறான உதவிகளை வழங்கி எமது மாவடிப்பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவிய முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீனுக்கு பாடசாலைச் சமூகம் சார்பாகவும், மாவடிப்பள்ளி மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Related Post