அளுத்கம வர்த்தக நிலைய தீவைப்பு சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் மாவனல்லையில் முஸ்லிம் வர்தகரொருவருக்கு சொந்தமான மற்றுமொரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது .பல சேனாக்களின் வருகைக்கு பின்னர்தான் இந்த சம்பவங்கள் இடம்பெறுகிறது என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
நேற்று 18 அதிகாலை மாவனலை நகரில் தீக்கிரையாகியுள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தொடர்பில் வினவியபோதே மேற்படி தெரிவித்தார் .
மேலும் அவர் தெரிவித்த தகவலில் , மதவாதிகளின் கையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வைத்துக்கொள்ள எடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே முஸ்லிம்கள் இதனைப் பார்க்கிறார்கள் இந்த நாசகார செயல்களுக்கு பின்னால் உள்ளவர்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கிறது அதை அவர்கள் செய்யவேண்டும். இப்படியான சம்பவங்கள் இனவாத அச்சத்தை நாட்டில் ஏற்படுத்திகிறது. வியாபார போட்டியில் ஈடுபடுபவர்களும் இனவாதத்தை பயன்படுத்தி இப்படியான நாசகார செயல்களில் ஈடுபட முற்படலாம் இது தொடர்பாக முறையான விசாரணையை அதிகாரிகள் முன்னெடுத்து உண்மையை வெளியிடவேண்டும்.
இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவதற்கு அவரிடம் நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளேன் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இந்த மாவனல்லை சம்பவம் உட்பட பல விடயங்களை பேசுவேன்.
நேற்று அதிகாலை தீக்கிரையான வர்த்தக நிலையத்தில் உரிமையாளருடன் தொடர்பு கொள்ள முற்பட்டேன் முடியவில்லை. அங்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராயவுள்ளேன் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் .