சீனாவில் அண்மையில் திறக்கப்பட்ட மாவோ சேதுங்கின் பிரமாண்ட சிலை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.
1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசை ஸ்தாபித்து 1976 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்த மாவோ சேதுங்கின் பிரமாண்ட சிலை, ஹெனான் மாகாணத்தின் ஸுஷிகாங் நகரில் கடந்த மாதம் திறந்துவைக்கப்பட்டது.
120 அடி (36.6 மீற்றர்) உயரமுடையதாக இச்சிலை அமைந்திருந்தது. 9 மாத காலமாக இச்சிலையின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 6.3 கோடி ரூபா இதற்காக செலவிடப்பட்டது.
ஆனால், கடந்த வியாழக்கிழமை இச்சிலை தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுமதி பெறாமல் இச்சிலை நிர்மாணிக்கப்பட்டமையே இச்சிலை தகர்க்கப்பட்டமைக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.