மிகின் லங்கா விமான நிறுவனத்தை மூடிவிட்டால் வருடத்திற்கு 365 கோடி ரூபா பணத்தை மீதப்படுத்தலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அந்நிறுவனத்தின் ஒருநாளைய நட்டம் ரூபா ஒரு கோடி எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.(iln)