Breaking
Mon. Dec 23rd, 2024

கம்பளையில் இயங்கி வரும் மினாரா பூட்ஸ் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை மற்றும் அலுவலகத் தொகுதியை உலப்பனை கைத்தொழில் பேட்டையில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் திறந்துவைத்தார். நிறுவனத்துக்கென தனியான இணையத்தளம் ஒன்றையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் திறந்து வைத்தார்.

2010 ஆம் ஆண்டு கம்பளை, மலபார் வீதியில் ஐந்து பேருடன் ஆரம்பிக்கப்பட இந்த நிறுவனம், இன்று அதனை விரிவாக்கிக்கொண்டு, உற்பத்தித் துறையில் தன்னிகரற்ற ஓர் இடத்தைப் பிடித்துள்ளது.

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான உலப்பனை கைத்தொழில் பேட்டையில், நிறுவனத்துக்கென தனியான தொழிற்சாலை ஒன்றை நிறுவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கண்டி, கேகாலை உள்ளடங்கிய 09 மாவட்டங்களில் இந்த நிறுவனம் தனது பணிகளை வியாபித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் மத்திய மாகாண நிறுவனங்கள் தரப்படுத்தல் வரிசையில், உற்பத்தித் துறையில் மூன்று விருதுகளையும் இந்த நிறுவனம் சுவீகரித்துக்கொண்டது.

உலப்பனையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் மௌலவி அல் ஹாபிழ் முபாரக், நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் முனாஸ், கைத்தொழில் பேட்டை முதலீட்டாளர் சங்கத்தின் பிரதிநிதி நசார். நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர்.ஏ.நளீம், லக்சல நிறுவனத்தின் பணிப்பாளரும், சமூக சேவையாளருமான ரியாஸ் இஸ்ஸதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

14639858_1444055228944001_8988862422632685882_n 14705806_1444053528944171_7507520841453830355_n 14741678_10206801673149972_274325836_n

By

Related Post