அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கைத்தொழில், வர்த்தக அமைச்சராக இருந்தபோது, அவ்வமைச்சின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட மினி கார்மெண்ட் (Mini Garment) செயற்திட்டத்தின் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று (3) பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
குறித்த நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயலாளரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதோடு, இந்தச் செயற்திட்டம் பற்றிய தெளிவுரையும் வழங்கப்பட்டது.
பயிற்சியை நிறைவு செய்த பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்களை கையளித்ததுடன், அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தக்கூடிய பேண்தகு அபிவிருத்திகள் தொடர்பாக, பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.