நாச வேலை காரணமாக நாட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என மீள் சுழற்சி சக்தி மற்றும் மின்வலு பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தடைப்பட்டது தொடர்பில் வெளிப்படையாக தெரியும் காரணிகள் மிகவும் அசாதாரணமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு அப்பாலான காரணிகளின் அடிப்படையில் மின்சாரம் தடைப்பட்டதா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும்,இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும் இவ்வாறு மின்சாரம் தடைபட்டிருந்தமை, நாச வேலையாக இருக்குமோ என சந்தேகிக்க போதியளவு அவகாசத்தை தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலன்றி மின்சாரத் தடைக்கான காரணங்களை கண்டறிய முடியாது எனவும் அதன் பின்னரே, மின்சாரத் தடை ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.