Breaking
Sun. Jan 5th, 2025
வவுனியா மாவட்டத்தில் உள்ள பூவரசன்குளம் மணியார் குளம் 50 வீட்டுத்திட்டத்திற்கு மின்சாரம் பெற்றுத் தந்தமைக்கு அப்பிரதேச மக்கள் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் க.கணகலிங்கம் தலைமையிலான செயலாளர் மகேந்திர ராசா,பொருளாலர் இ.விஜயகுமார் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
நீண்ட காலமாக இருளில் இருந்த எம்மை வெளிச்சத்தின் பால் கொண்டுவரும் வகையில் எமது கிராமத்திற்கு தேவைாயன மின்சார வசதியினை குறுகிய காலத்துக்குள் பெற்றுத் தந்து எம்மையும் அபிவிருத்தியின் பக்கம் இட்டுச் சென்றமைக்கு இக்கிராம மக்கள் தங்களுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
எமது தேவைகளை இனம் கண்டு அவற்றை நிறைவு செய்து தரும் வகையிலும்,அபிவிருத்திகள் என்று வரும் போது அதனை சமமாக எமக்கும் கிடைக்கும் வகையிலும் தங்களது செயற்பாடுகள் அமைந்துள்ளதை பாராட்டாமல் இருக்க முடியாது.முஸ்லிம் சமூகப் பிரதி நிதியாக நீங்கள் இருந்த போதும்,வவுனியாவில் வாழும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டிய அனைத்தையும் எவ்வித இனபாகுபாடுகளுமின்றி கெடந்த காலங்களில் பெற்றுக் கொடுத்துள்ளதை எமது சங்கம் நன்றியுடன் நினைவு கூர்கின்றது.
இவ்வாறான சூழலில் ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராகவும் வன்னி மாவட்ட அனைத்து இன மக்களின் சேவகனாக நின்று எமது மக்களுக்கு ஆற்றும் பணிகளுக்கும்,மணியர்குளம் 50 வீட்டுத்திட்டத்தில் உள்ள 65 குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்கியுள்ளமை எமது வாழ்வில் வரலாற்று பதிவாகும் என்பதை நாம் சுட்டிக்காட்டுவதுடன்,இவ்வாறான செயல்கள் 5லம் தமிழ் மக்கள் மத்தியில் தாங்கள் சிறந்த தலைவராக பறிமாற்றம் கண்டுள்ளதையும் தெரிவித்துக் கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சியினை அடைகின்றோம்.என கிராம அபிவிருத்தி சங்கம் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Related Post