Breaking
Fri. Nov 15th, 2024

நுரைச்சோலை அனல் மின்சார மைய திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளமையால் இனிமேல் மின்சார விநியோக தடையிருக்காது என்று மின்சக்தித்துறை பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி நுரைச்சோலையில் இருந்து முழுமையான 900 மெகாவோட்ஸ் மின்சார அலகையும் நேற்று நள்ளிரவுடன் தேசிய மின்சார விநியோகத்துக்கு வழங்கக்கூடியதாக இருக்கும் என்று அவர் நேற்று மாலை வெளியிட்ட தகவல் ஒன்றில் தெரிவிக்கிறார்.

எனவே அமைச்சரின் கருத்துப்படி இன்று முதல் மின்சார விநியோகத்தடை இருக்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை நாட்டின் மின்சார விநியோகத் தடை குறித்த அறிக்கையை இலங்கை மின்சார சபையின் முகாமையாளர்கள் இன்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடம் கையளிப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் மின்சாரசபையின் பொறியியலாளர்கள் உரியவேளையில் தமது பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாமையா? இந்த சம்பவத்துக்கான காரணம் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

By

Related Post