Breaking
Sun. Dec 22nd, 2024

ஆர்.கோகுலன்

மின்சார வேலியில் சிக்குண்டு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் வெலிமடை தம்பவின்ன பகுதியில் நேற்று வியாழக்கிமை(29) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த ரவிந்து டி சில்வா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை, தம்பவின்ன பகுதியில் சட்டவிரோதமாக மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே இச்சிறுவன் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Related Post