Breaking
Mon. Dec 23rd, 2024

மட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

நேற்று (13) நாடுபூராகவும் ஏற்பட்ட மின்தடையின் காரணமாக வெளிச்சத்திற்காக ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரி வீதியில் வசிக்கும் கோமலன் சுதா என்பவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த கட்டில், அலுமாரி, கதிரை உள்ளிட்ட தளபாடங்கள், கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள், துணிகள், வீட்டுக் கூரை, ஜன்னல், கையடக்க தொலைபேசி, மின்சார உபகரணங்கள் என்பன முற்றாக எரிந்துள்ளது.

வீட்டில் தானும் தனது கணவரும் வசிப்பதாகவும் தனது கணவர் இன்னும் ஒரு மாதத்தில் வெளிநாடு செல்லவிருந்ததாகவும் இந்தநிலையிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் கோமலன் சுதா தெரிவித்தார்.

6-DSC_5317

5-DSC_5326

4-DSC_5321

1-DSC_5304

By

Related Post