மின் கம்பங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குறித்த இடங்களுக்கு அருகில் செல்லாமல் 1987 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் மின்தடை ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் குறித்த இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் எனவும் மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் தொழிநுட்ப பிரிவு இலக்கமான 1987 மற்றும் மின்சக்தி அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கமான 1901 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் குறித்த பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மின்தடை தொடர்பாக தெரிவித்து மின்தடையினை சீர்செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை அனர்த்த முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.