Breaking
Mon. Dec 23rd, 2024
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலிவெட்டை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

இதில் கோ.கிருஸ்ணரூபன் (வயது 26), இ.புலேந்திரன் (வயது 35) ஆகிய இருவருமே ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது சடலம் கிராம சேவகரின் அனுமதியுடன் உறவினர்களினால் மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு பொலிசாரின் உதவியுடன் எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

By

Related Post