இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மின்னியல் உபகரணங்களுக்கான அனுமதியை ஒரே நாளில் பெற்றுக்கொடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின்னியல் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு குறித்த ஆணைக்குழுவின் அனுமதி பெறுவது அவசியம். அத்துடன் அனுமதிக்காக ஒரு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளதால் நுகர்வோர் அதிகம் சிரமங்களை எதிர்கொள்வதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுனில்.எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த சிரமங்களை தவிர்ப்பதற்காக புதிய வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் அது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்திற்காக விசேட தொழிநுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.