Breaking
Mon. Dec 23rd, 2024

மின்­சாரம் தடைப்­பட்­ட­தனால் மின்­னு­யர்த்­திக்குள் சிக்­கிக்­கொண்ட யுவ­தி­யொ­ருவர் 45 நிமி­டங்­க­ளுக்குப் பின்னர் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் கொழும்பு- 02, கொம்­பனி வீதியில் இடம்­பெற்­றுள்­ளது.

கொம்­பனி வீதியில் உள்ள புகை­யி­ரத வீட­மைப்பு தொகு­தியில் வசிக்கும் யுவ­தியே இவ்­வாறு மீட்­கப்பட்டவராவார். குறித்த யுவதி, மின்­னு­யர்த்­தியின் மூல­மாக ஏழா­வது மாடி­யி­லி­ருந்து, கீழே வந்­து­கொண்­டி­ருந்­த­போதே, திடீ­ரென மின்­சாரம் தடைப்­பட்­டதால் இடை­ந­டுவில் சிக்­கிக்­கொண்­டுள்ளார்.

இந்த சம்­பவம் தொடர்பில், தீய­ணைப்பு சேவை திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்­கப்­பட்­ட­ தை­ய­டுத்து விரைந்து செயற்­பட்ட தீய­ணைப்பு பிரி­வினர், அந்த யுவ­தியை மீட்­டுள்­ளனர்.

மின்­னு­யர்த்­தி­யா­னது அதி அழுத்தம் கொண்ட ஹைட்­ரோலிக் உப­க­ரணம் ஊடாக அறுத்து துண்­டாக்­கப்­பட்­டதன் பின்­னரே, அந்த யுவதி மீட்­கப்­பட்டார். தான், மின்­னு­யர் த்­திக்குள் சிக்­கிக்­கொண்­ட­தாக அந்த யுவதி, தன்­னு­டைய தொலை­பே­சியின் ஊடாக தாயாருக்கு தெரி­வித்­துள்ளார். அவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கா­விடின், அந்த யுவதியை காப்பாற்றியிருக்க முடியாது என்றும் தீயணைப்பு படையினர் அறிவித்துள்ளனர்.

By

Related Post