சவூதி நிருபர்
நேற்று லுஹர் தொழுகைக்கு பிறகு சவூதி அரேபியாவின் அமைச்சரவை; மன்னர் சல்மானின் தலைமையில் ஜித்தாவில் அமைந்துள்ள சலாமா மாளிகையில் நடை பெற்றது.
முஸ்லிம்களை படுகொலை செய்து வரும் மியன்மர் அரசுக்கு கடுமையான கண்டனங்களை இந்த அமைச்சரவை பதிவு செய்தது.
முஸ்லிம் இன படுகொலையை மியான்மர் அரசு தடுத்து நிறுத்தி விட்டு பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண பணிகளில் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்த சவுதி அரேபியாவின் அமைச்சரவை;
இதை மியான்மர் அரசு செய்ய தவறினால் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் துணையுடனும் ஐநா சபையின் உதவியுடனும் மியான்மர் அரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேர் கொள்ள போவதாகவும் சவூதி அரேபியாவின் அமைச்சரவை மியான்மார் அரசை கடுமையாக எச்சரித்துள்ளது.