தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கபுலி இனம் வேகமாக அழிவடைந்து வரும் ஓர் இனம் என்பதுடன், இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பழங்குடி விலங்கு வகையை சேர்ந்தவை.
இந்தப் புலிக்குட்டிகளின் நிறை 109 தொடக்கம் 227 கிலோ கிராம் என தெஹிவளை மிருக்காட்சி சாலையின் கடமை நேர பணிப்பாளர் ஜெனரல் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார்.
காடுகளில் வசிக்கும் போது இவைகளின் ஆயுட்காலம் 15 வருடங்கள் என்பதுடன் மிருகக்காட்சிசாலைகளில் வசிக்கும் போது இவற்றின் ஆயுள் காலம் 18 வருடங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மிருகங்களை பரிமாறிக் கொள்ளும் வேலைத்திட்டதின் கீழ் சீனாவின் சியங் பியங் மிருகக்காட்சிசாலையில் இருந்து குறித்த வங்கப்புலி ஜோடிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.