Breaking
Mon. Dec 23rd, 2024

– ஆர்.கிறிஷ்­ணகாந் –

கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் (9) காலை மதுரை நோக்கி புறப்­ப­ட­வி­ருந்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்­த­மான என் 3001 என்ற விமானம் புறப்­ப­டு­வ­தற்கு 6 மணித்­தி­யா­லங்கள் தாமதம் ஏற்­பட்­டுள்­ளது.

விமா­னத்­திற்குள் எலி­யொன்று புகுந்­துள்­ள­தாக பய­ணி­யொ­ருவர் விமானப் பணி­யா­ளர்­க­ளுக்கு அறி­வித்­த­த­னை­ய­டுத்து விமா­னத்­தி­லி­ருந்த பய­ணிகள் அனை­வரும் உட­ன­டி­யாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

விமான நிலைய பொறுப்­பா­ளர்கள் எலியை விமா­னத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு ஏறத்­தாழ 6 மணித்­தி­யா­லங்கள் வரை சென்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் பின்னர் முற்­பகல் 7.30 மணிக்கு மதுரை நோக்கி புறப்­ப­டு­வ­தற்கு ஆயத்­த­மா­க­வி­ருந்த குறித்த விமா­ன­மா­னது பிற்­பகல் 1.12 மணிக்கு இலங்­கை­யி­லி­ருந்து புறப்­பட்டு சென்­றுள்­ளது.

By

Related Post