மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் மீட்புப் பணிகளை நிறுத்திகொள்வதாக நேபாள நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் அந்நாடு சீர்குலைந்து போனது. வெறும் 3 கோடி மக்கள் தொகை மட்டுமே உள்ள நேபாளத்தில் 80 லட்சம் பேர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியா, சீனா,அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் நேபாள நாட்டின் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றன. பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 500ஐ தாண்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர், மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் வெளிநாட்டு மீட்புக் குழுவினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு உடனடியாக மறு சீரமைப்பு நடவடிக்கைகள் தேவை என்பதால் அதை செய்ய வேண்டிய கட்டாய நிலையில் நேபாள அரசு இருப்பதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று இந்தியாவிடம் அந்நாட்டு அரசு கோரிக்கை வைத்துள்ளதாகவும் வருகிறது