Breaking
Mon. Dec 23rd, 2024

பண்டாரகம – அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 வயதான மொஹமட் நஸ்ரின் என்ற வர்த்தகர் வங்கியின் தங்க நகைகள் ஏல விற்பனையின் பொருட்டு தனது குழுவினருடன் நேற்றைய தினம் கந்தளாய் பிரதேசத்திற்குச் சென்றுள்ளதாக வர்த்தகரின் தந்தை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று -04- முதல் இன்றுவரை அவருடனான தொடர்புகள் இல்லாமல் போயுள்ளதாகவும், எனவே இவர் காணாமல் போயிருக்கலாம் என அவரது தந்தை பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபார நோக்குடன் கந்தளாய் பிரதேசத்திற்கு சென்ற இவரும், அவருடைய நண்பர்களும் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளதாகவும், அவர் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தினை வைத்திருந்ததாகவும் அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post