மீண்டும் அரசியலில் ஈடுபட எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரி விஹாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன். பல்வேறு அரசியல் தீர்மானங்கள் காரணமாக அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிட்டது. எனினும், அரசியலில் ஈடுபடவே விரும்புகின்றேன் என திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.