Breaking
Thu. Jan 9th, 2025

இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்பிற்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் (வயது 32). ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேட் மிடில்டனை சந்தித்தார்.
இருவரும் காதலித்து, 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி முதலில் ஆண் குழந்தை பிறந்தது.
அந்த ஆண் குழந்தை இளவரசர் ஜார்ஜ் என்ற பெயரில் வளர்ந்து வருகிற நிலையில், இளவரசி கேட் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த அவருக்கு மே 02 ஆம் திகதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உள்ளூர் நேரப்படி காலை 8.34 மணிக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இளவரசி கேட் மிடில்டனும், குழந்தையும் நலமுடன் உள்ளனர், குழந்தை பிறந்தபோது, இளவரசர் வில்லியம் அங்கே இருந்தார்.
மேலும் இதே மருத்துவமனையில்தான் 32 ஆண்டுகளுக்கு முன்பாக இளவரசர் சார்ல்ஸ்–டயானா தம்பதியருக்கு இளவரசர் வில்லியம் பிறந்தார்.
இந்த குழந்தை இளவரசர் சார்ல்ஸ், இளவரசர் வில்லியம், இளவரசர் ஜார்ஜ் ஆகியோரை தொடர்ந்து 4 ஆவது வாரிசாக திகழும்.
பிரசவம் முடிந்து சில மணி நேரத்திற்குள் குட்டி இளவரசியுடன் கென்சிங்டன் அரண்மனைக்கு வந்த இளவரசர் வில்லியம் தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டயானாவின் கணவரும் இங்கிலாந்து இளவரசருமான சார்ல்ஸ் தனது பேத்தியை பார்த்து ஆரத்தழுவி வரவேற்றார்.
இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டி உள்ளதாகவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது.

Related Post