Breaking
Tue. Dec 24th, 2024

கஹாவத்தை, கொட்டகெதன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஆயுதத்துடன் மறைந்திருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாட்டின் பின்னர் கொட்டகத்தெனவில் மீண்டும் மரணபயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தாயும் மகளும் மட்டுமே வாழ்கின்ற வீட்டுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைந்திருந்துள்ளவரைக் கண்ட அவ்வீட்டிலிருந்த 29 வயதான யுவதி, கூச்சலிட்டதையடுத்தே அவர் தப்பியோடியுள்ளார். அரைகாற்சட்டை மட்டுமே அவர் அணிந்திருந்துள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டகத்தென பகுதியில் உள்ள வீடுகளுக்கு இரவிரவாக செல்லும் பொலிஸார், வீடுகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் கையொப்பமிடுவர். பொலிஸார் அவ்வாறு கையொப்பமிட்டு சென்றதன் பின்னர், குறித்த சந்தேகநபர் அந்த வீட்டுக்குக்கு அருகில் வந்துள்ளதாக அறியமுடிகின்றது.  இந்த சம்பவத்தையடுத்தே அங்கு மரணபயம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. கொட்டகெத்தன பகுதியில் இதுவரையிலும் 17பெண்கள் படுகொலைச்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

By

Related Post