Breaking
Sun. Mar 16th, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாளைய தினம் (19) பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமாகுமாறு கோரப்பட்டுள்ளது.

ஐ.டி.என் தொலைக்காட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் தொடர்பிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே நான்கு தடவைகள் மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் பிரசன்னமானார்.

இதேவேளை ஐ.டி.என் தொலைக்காட்சியின் உள்ளக கணக்காய்வு தலைவர் மஞ்சுள அழகியவன்ன வழங்கிய முரண்பட்ட வாக்குமூலம் காரணமாக வாக்குமூலங்கள் ஒத்திவைக்கப்பட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் கெஹலிய ரம்புக்வெல்ல, டளஸ் அழகப்பெரும உட்பட்டோரும் சாட்சியமளித்துள்ளனர்.

By

Related Post