Breaking
Mon. Dec 23rd, 2024

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீராவோடை தமிழ் பிரதேசத்திலுள்ள யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று முன்தினம்  31.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நெளபல் கிண்ணையடி இணைப்பாளர் உதயகுமார், மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

16473096_1353399718055050_8322407623202319477_n 16298979_1353399714721717_2770589248185053644_n 16472937_1353399734721715_2250335616393305285_n

By

Related Post